Exclusive: இறைவி விவகாரம்... கார்த்திக் சுப்பராஜுக்கு தடை... தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!
சென்னை: இறைவி படத்தில் தயாரிப்பாளர்களை அவமதித்து விட்டதாகக் கூறி, இனி படங்கள் இயக்க கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் இறைவி. இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. அதே நேரம் கலவையான விமர்சனங்களும் வந்தன.
இந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கார்த்திக் சுப்பராஜே எதிர்ப்பாராத ஒரு அதிர்ச்சி இடி விழுந்தது.

படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அதில் பல காட்சிகள் தயாரிப்பாளர்களுக்கு எதிராக இருப்பதாகவும், தமிழுக்காக குரல் கொடுப்போருக்கு எதிராக உள்ளதாகவும் கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களும் படத்துக்கு எதிராக அணி திரண்டனர். இதனால் படத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு கேட்டுக் கொண்டார்.
அடுத்த நாள் சனிக்கிழமை ஆர்கேவி தியேட்டரில் இறைவி சிறப்புக் காட்சி போடப்பட்டது. 150க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியைப் பார்த்தனர்.
இவர்களில் ஒரு குழுவினர் படத்தில் எந்தெந்த காட்சிகள் தயாரிப்பாளர்களை அவமதிக்கும்படி உள்ளன என்று பட்டியலிட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று தயாரிப்பாளர்கள் மீண்டும் சங்கக் கட்டடத்தில் கூடிப் பேசினர். இறுதியில், 'கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பாளர்களை மிகவும் அவமதித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இனி அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைக்காது. எந்தத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படம் இயக்கக் கூடாது. அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட இந்த தடையை விலக்கும் யோசனை இல்லை," என்று ஒருமனதாகத் தீர்மானித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும், இறைவி படத்தால் ஏற்படும் நஷ்டத்தை கார்த்திக் சுப்பராஜ்தான் தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications