5 லட்சம் பணம், கார் கொண்டு வா... மனைவியைக் கொடுமைப்படுத்திய பேராசிரியர் கைது
நாமக்கல்: நாமக்கல்லில் கட்டிய மனைவியை 5 இலட்சம் பணமும், காரும் கேட்டு துன்புறுத்திய பேராசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரியா. இவருக்கும், திருச்செங்கோடு அருகே கருவேப்பம்பட்டி திருநகர் காலனியைச் சேர்ந்த கல்லுரிப் பேராசிரியர் பார்த்தசாரதி என்பவருக்கும் 2009 இல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. இந் நிலையில் வரதட்சணையாக பணம் வாங்கி வருமாறு பார்த்தசாரதி ஜெயப்பிரியாவை துன்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, 2012 ஆம் ஆண்டு இருவருக்கும் சமரசம் செய்து வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெற்றோரிடம் ரூபாய் 5 லட்சம் ரொக்கமும், ஒரு காரும் வாங்கி வருமாறு மீண்டும் ஜெயப்பிரியாவை பார்த்தசாரதி துன்புறுத்தினாராம்.
இதையடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஜெயப்பிரியா மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் உரிய விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பார்த்தசாரதியை செவ்வாய்க்கிழமையன்று கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications