உயர் அதிகாரிகளுக்காக மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை சஸ்பெண்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  புரோக்கராக மாறிய பேராசிரியை..வெளியான அதிர்ச்சி ஆடியோ

  அருப்புக்கோட்டை: கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணித பேராசிரியையாக இருப்பவர் நிர்மலா தேவி.

  Professor, who forced college girls to do nasty thing, gets suspended

  அவர் தான் வேலை செய்யும் கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளுக்கு கால் செய்து அவர்களை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் சிலருடன் படுக்கையை பகிருமாறு தெரிவித்துள்ளார்.

  மாணவிகள் மறுத்தபோது அவசரம் இல்லை, யோசித்து சொல்லுங்கள். உங்களின் நல்லதுக்காகவே கூறுகிறேன். இந்த காலத்தில் இது எல்லாம் சர்வ சாதாரணம் என்பது உங்களுக்கே தெரியும்.

  உங்களின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் ஓசூருக்கு வந்துவிடுங்கள். அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்தால் பல சலுகைகள் கிடைக்கும் என்று அந்த ஆசிரியை மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.

  அவர் 20 நிமிடம் மாணவிகளிடம் பேசிய பேச்சு வாட்ஸ் ஆப்பில் வெளியாகி தீயாக பரவியுள்ளது. இதையடுத்து நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி யாருக்காக புரோக்கர் வேலை பார்த்து மாணவிகளை அழைத்தார் என்று கேள்வி எழுந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Maths professor Nirmala Devi who forced four college girls to sleep with higher officials of Madurai Kamaraj University has been suspended.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற