For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'குழாயடி சண்டை'களில் சிக்காத தர்மபுரி அதிமுக வேட்பாளர் மோகன்

|

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அதிமுக வேட்பாளர் பி.எஸ்.மோகன் எந்த கோஷ்டி பிரச்சனையிலும் சிக்காதவர் என்ற பெயருடன் களம் காண்கிறார்.

கட்சியின் மூத்த நிர்வாகியான இவர்.பி.எஸ்.சி ,பி.எல் படித்துள்ளார். வன்னிய கவுண்டரான இவர் 1972 இல் இருந்து எம்.ஜி.ஆரின் தீவிர பக்தனும் ஆவார்..

முன்பே மோகனுக்கு எம்.பி சீட் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் அப்போது கிடைக்கவில்லை, இப்போது கிடைத்துள்ளது.

Profile of Dharmapuri ADMK Candidate Mohan

மாவட்ட செயலாளர்:

தற்போது தர்மபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஆக இருக்கும் மோகன் 2001-2006 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றிவர்.

பெற்றோர்,குழந்தைகள்:

இவரது தந்தை சாமிநாதன் முன்னாள் ராணுவ வீரர். தாயார் சிவகாமியம்மாள், மனைவி பூங்கோதை, மூத்த மகன் ஜெயவிக்னேஷ் பி.இ, இளையமகன் தினேஷ் எம்.பி.பி.எஸ் தற்போது சென்னையில் பணிபுரிகின்றார்.

பலத்த சர்ச்சை:

மோகனை வேட்பாளராக அறிவித்ததில் கட்சி மட்டத்தில் பலத்த சர்ச்சை நிலவுகின்றது. காரணம் கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தலை காட்டவில்லை என்ற குற்றசாட்டுகள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உள்ளது.

வேட்பாளர் பேர் என்னங்க:

இவரை வேட்பாளராக அறிவித்த பிறகுதான் கட்சியில் யாருங்க வேட்பாளர் என்று ஒன்றிய செயலாளர்கள் கேட்கும் அளவிற்கு பி.எஸ்.மோகனின் பிரபலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது.

கோஷ்டி பிரச்சனைகள் இல்லை:

1998 முதல் 2003 வரை தர்மபுரி மாவட்ட துணைசெயலாளராக உள்ளார். தர்மபுரி குமரசாம்பேட்டையில் குடியிருந்த மோகன் தற்போது சூடாமணி தெருவில் குடியிருந்தது வருகின்றார். கட்சியில் எந்த கோஷ்டி பிரச்சனையில் சிக்காதவர் என்பதால் ஜெ இவரை வேட்பாளராக்கியதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

English summary
ADMK's Dharmapuri candidate Mohan has a very low profile among the party cadres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X