சூப்பர் சீனியர்கள் ப்ளஸ் இளைஞர்கள்... ஜெ. அமைச்சர்களின் பயோடேட்டா
சென்னை: ஓ. பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன் என சூப்பர் சீனியர்களையும் 30 வயதே ஆன ராஜலட்சுமி போன்ற இளம் வயதினரையும் உள்ளடக்கியதாக முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவை இருக்கிறது.
தமிழக அமைச்சர்களின் பயோடேட்டா விவரம்:

ஓ. பன்னீர்செல்வம்:
நிதி அமைச்சரான ஓ.பன்னீர் செல்வத்துக்கு வயது 66. பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். பெரியகுளம் நகரசபை தலைவராகவும், நகர அ.தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார். 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் முதல்வராக 2 முறை பதவி வகித்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திர நாத்குமார், ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும், கவிதாபானு என்ற மகளும் உள்ளனர்.

திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவின் திண்டுக்கல் மாவட்ட செயலராக இருந்தவர். லோக்சபா எம்.பி.யாக 4 முறை பதவி வகித்தவர். அதிமுகவின் மாநிலப் பொருளாளராகவும் பதவி வகித்தார்.

சி.வி. சண்முகம்
சட்டத்துறை அமைச்சரான சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு வயது 47. பி.ஏ.பி.எல். படித்துள்ளார். இவருடைய தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பி. யாகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அதிமுக அமைப்பாளராகவும் இருந்துள்ளார். சி.வி.சண்முகத்துக்கு கவுரி என்ற மனைவியும் ஜெயசிம்மன் என்ற ஒரு மகனும் வள்ளி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

செல்லூர் ராஜு
கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜு (வயது 62) மதுரை மேற்கு தொகுதியில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். காமாட்சி தேவரின் மகனான இவர் பி.எஸ்சி. பட்டதாரி. இவரது மனைவி ஜெயந்தி. 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி, சொந்த ஊர் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம். தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார் பி.இ.படித்துள்ளார்.

எஸ்.பி.சண்முகநாதன்
பால்வளத்துறை அமைச்சரான எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் பண்டாரவிளையைச் சேர்ந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்தார். அவருடைய மனைவி ஆஷா. ராஜா என்ற மகனும், புவனேசுவரி, கலையரசி, பொன்னரசி, தமிழரசி, பொன்ரேகா ஆகிய 5 மகள்களும் உள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி
உள்ளாட்சித் துறை, சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சரான எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.ஏ. எம்.பில் படித்துள்ள இவர் கோவையை அடுத்த குனியமுத்தூரை சேர்ந்தவர். கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தை சேர்ந்த இவர் குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தவர். எஸ்.பி.வேலுமணியின் மனைவி பெயர் வித்யா தேவி. இவர்களுக்கு விஷால் என்ற மகனும், வந்தனா என்ற மகளும் உள்ளனர்.

எம்.சி. சம்பத்
தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது சொந்த ஊர் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமம் ஆகும். எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர். கடந்த 2001-ம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றிபெற்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

பி.தங்கமணி
மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான பி.தங்கமணி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர். அவருக்கு வயது 57. பி.ஏ.பட்டம் பெற்றவர் ஆவார். இவரது தந்தை பெருமாள் கவுண்டர். தாயார் செல்லம்மாள். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், பரனிதரண்(22) என்ற மகனும், லதாஸ்ரீ(20) என்ற மகளும் உள்ளனர்.

ஆர்.பி.உதயக்குமார்
வருவாய்த்துறை அமைச்சரான ஆர்.பி.உதயக் குமாரின் தந்தை பெயர் போஸ். ஆர்.பி. உதயக்குமார் பி.காம் பி.எல்., எம்.எஸ்.டபிள்ï. படித்துள்ளார். மனைவி தாமரைச்செல்வி. 2 மகள்கள் உள்ளனர். முதன் முதலில் மதுரை அரசு சட்டக்கல்லூரி அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளராக இருந்தார். அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார்.

ஓ.எஸ். மணியன்-
ஜவுளித்துறை அமைச்சரான ஓ.எஸ். மணியன் 1995- 2001 ஆண்டில் ராஜ்யசபா எம்.பி.யாகவும் 2009-2014-ல் லோக்சபா எம்.பி.யாகவும் பதவி வகித்தவர். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

ஆர். காமராஜ்
உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான காமராஜ், 1980 முதல் அதிமுக அடிப்படை உறுப்பினர். கோட்டூர் ஒன்றியச் செயலர், ஜெ. பேரவை மாநிலச் செயலர், 7 ஆவது முறையாக திருவாரூர் மாவட்டச் செயலர், 2001-07 வரை ராஜ்யசபா எம்.பி. என பதவி வகித்தவர். 2006-ம் ஆண்டு மன்னார்குடி சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆனால் 2011-ல் நன்னிலம் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2011 நவம்பர் மாதம் முதல் உணவுத்துறை அமைச்சர், 2015 முதல் இந்து, சமய அறநிலையத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார். தற்போது நன்னிலம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றுள்ளார்.

உடுமலை ராதாகிருஷ்ணன்
வீட்டு வசதித்துறை அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியத் தலைவராக இருந்தார். இவர் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உடுமலையில் கேபிள் டிவி தொழில் நடத்தி வருகிறார். அதிமுகவில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணிச் செயலாளராகவும் ஜெயலலிதா பேரவைத் தலைவர் மற்றும் செயலாளராகவும், திருப்பூர் புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும், மாநில தேர்தல் பிரிவு செயலாளராகவும் பணியாற்றியவர்.

விஜயபாஸ்கர்
மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கர் 2011 ஆம் ஆண்டில் எம்.எல்.ஏவாக ஜெயித்து சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை வகித்தவர். விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ், பி.எல் முடித்தவர். மனைவி ரம்யா. இரண்டு மகள்கள் உள்ளனர். புதுகை மாவட்டம், ராப்பூசல் இவருடைய சொந்த ஊர். 2001 முதல் 2006 வரை புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர், கடந்த 4 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தார்.

கடம்பூர் ராஜூ
தகவல் மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.

கே.டி. ராஜேந்திர பாலாஜி
ஊரகத் தொழில்துறை அமைச்சரான கே.டி.ராஜேந்திர பாலாஜி 1986 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். விஸ்வகர்மா (ஆசாரி) சமூகத்தைச் சேர்ந்தவர். அருப்புக்கோட்டையை அடுத்த குருந்தமடம்தான் இவர் சொந்த ஊர். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இன்னும் திருமணமாகவில்லை. 2000ம் ஆண்டு முதல் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்போது விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். 2011-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சிவகாசி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு செய்தி, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கங்கள் துறை அமைச்சரானார். 3 முறை திருத்தங்கல் நகராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி

வெல்லமண்டி நடராஜன்
சுற்றுலாத்துறை அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அவைத்தலைவராக நீண்டகாலம் பதவி வகித்து வருகிறார். 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலராகவும் பணியாற்றியவர்.

பெஞ்சமின்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான பெஞ்சமின் மதுரவாயல்(தனி) தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 1988 முதல் 1990 வரை அயனம்பாக்கம் கிளைச் செயலாளராகவும், 2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர், சென்னை மாநகராட்சியின் துணை மேயராக பதவி வகித்தார்.

விஜயபாஸ்கர்
போக்குவரத்துத் துறை அமைச்சரான கரூர் விஜயபாஸ்கர் 1989 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். கொங்கு வெள்ளாளக் கவுண்டர் இனத்தை சேர்ந்த இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை தாந்தோணி ஒன்றிய செயலாளராகவும், 2015 ஆண்டு முதல் 2016 வரை மாவட்ட செயலாளராகவும் இருந்தவர். தாந்தோணி ஒன்றியக் குழு உறுப்பினராக தொடர்ந்து மூன்று முறை இவர் தேர்வு செய்யப்பட்டார்.

டாக்டர் மணிகண்டன்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான எம்.மணிகண்டன். எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்து, அறுவைச் சிகிச்சை நிபுணராக உள்ள இவர், மதுரை அண்ணா நகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். தந்தை பெயர், செ.முருகேசன். அதிமுகவில் ராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவராக இருந்து வருகிறார். மாநில மருத்துவ அணியின் துணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

ராஜலட்சுமி
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரான ராஜலட்சுமி சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்தான் ஜெ. அமைச்சரவையில் மிகவும் இளையவர். 2004 முதல் 18வது வார்டு இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தார். 2015-ல் நகர அதிமுக இணைச்செயலரானார். 2014ஆம் ஆண்டு முதல் சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவராக இருந்து வருகிறார்.

வளர்மதி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான வளர்மதி, ஸ்ரீரங்கம் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வென்றவர். அதிமுகவில் மாவட்ட இணைச் செயலராகவும் பணியாற்றியாற்றியவர்.

துரைக்கண்ணு
கால்நடைத்துறை அமைச்சரான துரைக்கண்ணு பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. 2006, 2011-ம் ஆண்டுகளிலும் எம்.எல்.ஏ.வாக வென்றவர். பாபநாசம் ஒன்றிய அதிமுக செயலராக இருக்கிறார்.

கே.சி. வீரமணி
வணிகவரித்துறை அமைச்சரான ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. வீரமணி, முந்தைய ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.2006 முதல் அதிமுகவின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். கடந்த 1993-ம் ஆண்டு முதல் கட்சியில் உறுப்பினராக உள்ள இவர், ஜோலார்பேட்டை கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். பி.ஏ. வரை படித்துள்ள இவர், பீடி தொழிற்சாலையையும் நடத்தி வருகிறார்.

வி.சரோஜா
சமூக நலத்துறை அமைச்சரான டாக்டர் சரோஜா ராசிபுரம்(தனி) தொகுதியில் வெற்றி பெற்றவர். எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி பதவிகளை வகித்தவர். 1991-ல் சங்ககிரி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். 1998, 1999-ல் ராசிபுரம் லோக்சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக லோக்சபா தலைவராகவும் இருந்தவர்.

கே.சி. கருப்பண்ணன்
சுற்றுச் சூழல் அமைச்சரான கே.சி. கருப்பண்ணன் பவானி தொகுதி எம்.எல்.ஏ. பவானி நகர்மன்றத் தலைவராக இருந்தவர். இவர், விவசாயம் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். கொங்கு வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி தேவி, மகன் கே.யுவராஜா. பதவிகள்: 1972-இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு கிளைச் செயலாளர். 1994-இல் பவானி ஒன்றிய அவைத் தலைவர். 1999-இல் பவானி ஒன்றியச் செயலாளர். 2001-ஆம் ஆண்டு முதல் 2006 வரை பவானி தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர். 2006-இல் மீண்டும் அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பவானி தொகுதி அதிமுக சட்டப்பேரவைத் தொகுதிச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

கே.பி.அன்பழகன்
உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி. அன்பழன் பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். 2001,2006, 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்தித் துறை அமைச்சராகவும் இருந்தவர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications