ஒண்டிவீரன் நினைவு தினம், பூலித்தேவன் பிறந்த நாள் விழா.. நெல்லையில் இன்று முதல் 144 தடை உத்தரவு
ஒண்டிவீரன் நினைவு தினம், பூலித்தேவன் பிறந்த நாள் விழாவையொட்டி நெல்லையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: ஒண்டிவீரன் நினைவு தினம், பூலித்தேவன் பிறந்த நாள் விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய ஒண்டிவீரன் நினைவு தினத்தையும், பூலித்தேவன் பிறந்த நாளையும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும் செவல் கிராமம், மஜரா பச்சேரியில் ஒண்டிவீரன் நினைவு நாள் 20.08.2018 அன்றும், பூலித்தேவன் பிறந்த நாள் 01.09.2018 அன்றும் கொண்டாட உள்ளது. இதனால், மேற்படி நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வாகனங்களில் திருநெல்வேலிக்கு வந்து பல்வேறு பிரிவினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியைக் காப்பதற்காக 19.08.2018 அன்று காலை 6 மணி முதல் 02.09.2018 அன்று காலை 6 மணி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டமாக கூடுவதற்கும், வாள், கத்தி, கட்டைகள், கற்கள் போன்ற இதர தடைசெய்யப்பட்ட ஆயுதங்களுடன் ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவதற்கும், பால்குடம், முளைப்பாரி போன்றவற்றுடன் ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, திருநெல்வேலியில், வாடிக்கையாக நின்று செல்லும் வாகனங்கள் வேறு இடங்களுக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், மாணவ மாணவியரை பள்ளி , கல்லூரிகளுக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வழக்கமாக செல்லும் ஆம்னி பஸ் ஆகியவை தவிர்த்து இதர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒண்டி வீரன் நினைவு தினம் மற்றும் பூலித்தேவன் பிறந்த தினம் ஆகியவற்றிற்கு வரும் தொண்டர்களை ஏற்றி வரும் சுற்றுலா வாகனங்கள் ஆகியவை திருநெல்வேலி மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 144 (1), (2) -ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications