ஒரே வீட்டில் தங்கியதால் கூட்டுசதி என கூற முடியாது.. கூட்டுசதிக்கு குமாரசாமி கொடுத்த விளக்கம்!
சென்னை: ஜெயலலிதாவுடன், சசிகலா உட்பட மற்ற, இருவரும் ஒரே வீட்டில் தங்கியதால், அவர்கள் கூட்டாக சதி செய்து சொத்துக்களை வாங்கியதாக முடிவுக்கு வர முடியாது என்று கர்நாடக ஹைகோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருப்பது கூட்டுசதி குறித்த வழக்குகளில் புதுபார்வையை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கூடவே இருந்தால் சதி செய்ய முடியுமா?
வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜெயலலிதாவுடன், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கியதால், அவர்கள் சதி செய்ததாக கூற முடியாது. சதி நடந்துள்ளது என்பதையும், அந்த சதியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பங்கு கொண்டனர் என்பதையும், நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும்.

கடன்தான்
இந்த வழக்கை பொறுத்தவரை, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கணிசமான தொகையை கடனாக பெற்று, அசையா சொத்துக்களான, விவசாய நிலங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை வாங்கியிருப்பது, சாட்சியங்கள் மூலம் வெளிப்படுகிறது.

சட்டப்பூர்வம்
அவர்களுக்கு, வந்த வருமான ஆதாரம் சட்டப்பூர்வமானது. அதற்கான நோக்கமும் சட்டப்பூர்வமானது. எனவே, ஜெயலலிதாவுடன் சேர்ந்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கியதால் அவர்கள் சதி செய்து, முறையற்ற வகையில் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என, இந்த நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது.
இவ்வாறு நீதிபதி குமாரசாமி உத்தரவில் கூறியுள்ளார்.

புது கோணம்
குமாரசாமியின் இந்த தீர்ப்பு, கூட்டு சதி குறித்த வழக்குகளில், புதிய பார்வையை உருவாக்கலாம். கூட்டாக சதி செய்தோர் வழக்குகளில் அவர்கள் ஒரே வீட்டில் தங்கினார்கள் என்ற ஆதாரம் பிற வழக்குகளிலும் எடுபடாமல் போகலாம் என்று மூத்த வக்கீல்கள் கூறுகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications