கோவையில் ஆன்லைன் மூலம் விபச்சாரம்... கொல்கத்தா மற்றும் கர்நாடகா பெண்கள் மீட்பு!
கோவை: கோவையில் இணையதளம் மூலமாக நடைபெற்ற விபச்சாரத்தினைக் கண்டறிந்து கொல்கத்தா மற்றும் கர்நாடக பெண்களை மீட்டுள்ளனர் போலீசார்.
கோவை மாநகர் பகுதியில் நூதன முறையில் இணையதளம் வாயிலாக விபசாரம் நடைபெறுவதாக மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இணையதளங்களை கண்காணித்தனர். அப்போது ஒரு இணையதளத்தில் வெளிமாநில விபசார அழகிகள் உள்ளதாக விளம்பரம் வெளியாகி இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணுக்கு போலீசார் வாடிக்கையாளர் போல் போன் செய்து பேசினர்.
எதிர்முனையில் பேசிய விபசார புரோக்கர் தன்னிடம் வெளிமாநில அழகிகள் உள்ளதாகவும், ஒரு நாள் இரவுக்கு ரூபாய் 10 ஆயிரம் கட்டணமாக தர வேண்டும் என்றும் கூறினார். மேலும் உக்கடம் பஸ் நிலைய பகுதிக்கு வாருங்கள் என்றும் அழைத்தார்.
விபசார புரோக்கர் கூறிய இடத்துக்கு போலீசார் மாறு வேடத்தில் சென்றனர். அங்கு ஒரு காரில் 3 அழகிகள் மற்றும் ஒரு பெண் புரோக்கர் இருந்தனர். முக்கிய புரோக்கரான நசீர், வந்திருப்பது வாடிக்கையாளர் தான் என நினைத்து போலீசாரிடம் பேசினார்.
அப்போது மறைந்து இருந்த போலீசார் நசீரை மடக்கி பிடித்து கைது செய்தனர். காரில் இருந்த பெண் புரோக்கரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 5 செல்போன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கொல்கத்தாவை சேர்ந்த 2 அழகிகள் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த அழகி உள்பட 3 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications