நட்சத்திர கிரிக்கெட்டை எதிர்த்து சேப்பாக்கம் மைதானம் முற்றுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்டும் வகையில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.

Protest against Natchathira cricket league

8 அணிகள், அணிக்கு 6 வீரர்கள் என விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி விளையாடும்போதிலும் அதை காண மக்கள் கூட்டத்தை ஸ்டேடியத்தில் காண முடியவில்லை.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நடிகர்களிடம் பணமா இல்லை, நாங்கள் எதற்காக கொடுக்க வேண்டும் என மக்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 50 பேர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களிலும் பலர் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+