பீப் 'சாங்': சிம்பு, அனிருத்துக்கு எதிராக பெண்கள் கோவையில் போராட்டம் - புகைப்படங்களூக்கு செருப்படி!!
கோயம்புத்தூர்: மிக வக்கிரமான பாடலை பாடிய நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக கோவையில் பெண்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். அப்போது சிம்பு, அனிருத் புகைப்படங்களை பெண்கள் கிழித்தெறிந்தனர்.
சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் பாடல் ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் அச்சில் ஏற்ற முடியாத கொச்சை வார்த்தைகளுடன் சிம்பு பாடல் பாடியுள்ளார்.

அந்த வார்த்தைகளை பீப் ஒலி கொடுத்து மறைக்க முயற்சிப்பது போல பாவனை செய்துள்ளனர். அதனால் சிம்பு குறிப்பிடும் அந்த கெட்டவார்த்தை கேட்கவே செய்கிறது.
சிம்பு, அனிருத்தின் இந்த வக்கிரத்தனம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் சிம்பு, அனிருத் இருவரும் காய்ச்சி எடுக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கோவை காவல்துறையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிம்பு, அனிருத் மீது புகார் கொடுத்தனர். அதில், பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்வதுமாக போக்குக்கு தூபம் போடுவது போல் இருவரும் இந்த பாடலை பாடியுள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, சிம்பு மற்றும் அனிருத் படங்களை கிழித்து செருப்படி கொடுத்து தங்களது எதிர்ப்பை ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெளிப்படுத்தினர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications