தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: புதுச்சேரியில் தபெதிக போராட்டம் - எடப்பாடி உருவபொம்மை எரிப்பு
துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து புதுச்சேரியில் தபெதிகவினர் போராட்டம் நடத்தியதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி : தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸார் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், காவல்துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதே போல, புதுச்சேரியிலும் காமராஜர் சாலை அருகே தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடந்தது.
பலியானவர்களுக்கு நீதி வேண்டி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே நேரம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த போராட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்களை போலீஸார் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போலீஸாருக்கும், தபெதிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சிலர் காயமடைந்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications