ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ குழு வாகனத்தை விரட்டியடித்த பொதுமக்கள்- பேனர் எரிப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட வலியுறுத்தி தொடருகிறது போராட்டம்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனத்தை கிராம மக்கள் சிறைபிடித்து விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் 45-வது நாளாக இன்றும் போராட்டம் தொடருகிறது.

அதேபோல் தற்போது மாணவர்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். தன்னெழுச்சியாக மாணவர்கள் நேற்று போராட்டங்களை நடத்தினர்.
இதனிடையே முத்தையாபுரம் அத்திமரப்பட்டி கிராமத்துக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சொந்தமான நடமாடும் மருத்துவ குழு வாகனம் நேற்று சென்றது. 2 மாதங்களுக்கு ஒரு முறை இந்த நடமாடும் மருத்துவ குழு வாகனம் அங்கு வரும்.
ஆனால் இந்த முறை அத்திமரப்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு ஸ்டெர்லை நிறுவனத்தின் அந்த வாகனத்தை சிறைபிடித்தனர். 'புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மருத்துவ உதவி எங்களுக்கு தேவை இல்லை' எனக் கூறி அந்த வாகனத்தை விரட்டி அடித்தனர்.
அத்துடன் அத்திமரப்பட்டி கிராமத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இந்த மருத்துவ குழு வருகை தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதையும் பொதுமக்கள் ஆவேசத்துடன் கிழித்தெறிந்து தீ வைத்து எரித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications