காதலர் தினம் உற்சாகக் கொண்டாட்டம்: இந்து அமைப்பினர் போராட்டம்
சென்னை: காதலர் தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுபுறம் போராட்டமும் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் ‘காதலர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வெகு பரவலாக இளைஞர்களால் இந்த கொண்டாட்டம் களை கட்டி வருகிறது.
தமிழ்நாட்டில் மிகமுக்கிய சுற்றுலா தலங்களான சென்னை மெரீனா கடற்கரை, திருச்சி முக்கொம்பு அணை, முக்கடலும் சங்கமிக்கும் குமரி கடற்கரையில் கூட்டம் கூட்டமாக குவிந்த காதலர்கள் தங்களின் அன்பிற்குரியவர்களுக்கு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.
உற்சாகக் கொண்டாட்டம்
இந்த காதலர் தினத்தை குறிவைத்து பெரிய, பெரிய வர்த்தக நிறுவனங்கள், பொழுது போக்கு மற்றும் கேளிக்கை மையங்கள் இளைஞர் பட்டாளங்களை தங்கள் பக்கம் இழுத்து வருவாயை வாரிக்கொட்ட கவர்ச்சிகரமான பெயர்களில் பல்வேறு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் போட்டி போட்டிக்கு கொண்டு அறிமுகம் செய்துள்ளன.
அன்பிற்குரிய பரிசு
காதலர்கள் தங்களது அன்பிற்குரியவர்களுக்கு பூங்கொத்து, சாக்லெட், விலை உயர்ந்த டாய்ஸ், நவீன ஆடைகள், ஆபரணங்கள் என பல்வேறு பொருட்களை காதலர் தினத்தில் வாங்கி கொடுத்து வருகின்றனர்.
ரூ.18 ஆயிரம் கோடி வர்த்தகம்
உலகம் முழுவதும் காதலர் தின வியாபாரத்தில் எந்த அளவிற்கு விற்பனை நடக்கிறது என்பதை கண்டறிய நடத்தப்பட்ட ஒரு சர்வேயில், ‘காதலர் தினம் தொடங்கி ஒரு வாரத்திற்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும்' என்று தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடந்தது என்றும், இந்த ஆண்டு இந்த விற்பனை 25 சதவீதம் அதிகம் இருக்கும் என்று சர்வேயில் தெரியவந்துள்ளது.
ஆண்கள்தான் அதிகம்
காதலர்களில் 65 சதவீத ஆண்கள் தங்களது பார்ட்னருக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுப்பார்கள் என்றும் 35 சதவீத பெண்கள் தங்களது பார்ட்னருக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பார்கள் என்றும் அந்த சர்வே சுட்டிகாட்டியுள்ளது.
எதிர்ப்பு போராட்டம்
ஒருபுறம் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபி செட்டிபாளையம் அருகே நாய்க்கும் வெள்ளாட்டுக்கும் திருமணம் செய்து வைத்து இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர். கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரியில் இருந்து மணமகன் போல் நாயையும், மணமகள் போல் வெள்ளாட்டையும் அலங்கரித்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
நாய்- வெள்ளாடு
கொடிவேரி அணை மேல் பகுதியில் உள்ள அக்கரை முனியப்பன் கோயில் முன்பு புரோகிதர் போல் வேடமிட்ட ஒருவர் மந்திரம் ஓத, மாலை மாற்றி நாய்க்கும், வெள்ளாட்டுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications