தொடர் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தும் புதிய தமிழகம்.. லிஸ்ட் வெளியிட்டார் கிருஷ்ணசாமி
சென்னை: புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி நடத்தப்படவுள்ளதாக அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான் என ஆறுவிதமான பெயர்களில் அழைக்கப்படும் ஒரே இன மக்களை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திடவும்; எம்இன மக்களை, ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்புப் பட்டியல் உருவாக்கி இட ஒதுக்கீடு வழங்கவும்.

தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய அளவிலும் சமூக நீதியை நிலைநாட்ட அளப்பரிய உயிர் தியாகம் செய்த தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்கவும். மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டவும்.
மருத நில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திர குல வேளாளர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கவும்.
நாடாளுமன்ற வளாகத்தில் இம்மானுவேல் சேகரன் திருஉருவ சிலை அமைக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
நடைபெறும் இடம் மற்றும் தேதி விவரங்கள்.
நவம்பர்-25 நெல்லை
டிசம்பர்-3 தூத்துக்குடி
டிசம்பர்-5 விருதுநகர்
டிசம்பர்-10 இராமநாதபுரம்
டிசம்பர்-15 திருச்சி
டிசம்பர்-17 மதுரை
டிசம்பர்-19 திண்டுகல்
டிசம்பர்-24 தேனி
டிசம்பர்-27 கரூர்
ஜனவரி-5 தஞ்சாவூர்
ஜனவரி-6 திருவாரூர்
ஜனவரி-7 பெரம்பலூர்
ஜனவரி-8 நாமக்கல்
ஜனவரி-9 சேலம்
ஜனவரி-10 ஈரோடு என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications