அதிமுக அணியில் புதிய தமிழகம் எம்.எல்.ஏவா? 30-ந் தேதி க்ளைமாக்ஸ்

புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அக்கட்சியின் தலைவருமான கிருஷ்ணசாமி மற்றும் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ராமசாமி என இரு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
ஆனால் அண்மைக்காலமாக கிருஷ்ணசாமிக்கும் ராமசாமிக்கும் இடையே மன வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வாய்ப்பு கிடைத்தால் அதிமுகவை ஆதரிப்பேன் என்று பகிரங்மாகவே ராமசாமி தெரிவித்திருந்தார்.
அண்மையில் நடைபெற்ற சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்த போது, ராமசாமி அமைதியாக சபையிலேயே உட்கார்ந்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ராமசாமியும் கிருஷ்ணசாமியும் நானே என்று டாக்டர் கிருஷ்ணசாமி பதிலளித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, எங்கள் கட்சியின் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ராமசாமி, அ.தி.மு.க., பக்கம் சென்று விட்டார் என, கூறுகின்றனர். அவர், புதிய தமிழகம் கட்சியில் நீடிக்கிறாரா, இல்லையா என்பது இம்மாதம், 30ந் தேதி, கட்சியின் சார்பில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிந்துவிடும். அவர், கட்சியில் நீடிக்கிறார் என்றால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார் என்றார்.
ஆக 30-ந் தேதி க்ளைமாக்ஸ் இருக்கிறது..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications