குற்றாலத்தை சர்வ தேச சுற்றுலாதலமாக்குவேன்- தென்காசி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி
விருதுநகர்: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைத்து எம்.பியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் குற்றாலத்தை சர்வதேச சுற்றுலா தலமாக்குவேன் என்று திமுக கூட்டணியில் போட்டியிடும் தென்காசி தொகுதி வேட்பாளர் புதியதமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தென்காசி லோக்சபா தொகுதியின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமணமண்டபத்தில் திமுக கூட்டணிகட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. திமுக மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றக் கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது;

கடந்த 40ஆண்டுகாலமாக தென்காசி தொகுதியில் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை நான் வெற்றி பெற்றால் மேற்க்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாய் கேரளமாநிலக் கடலில் கலக்கும் 30ஆயிரம் டி.எம்.சி.தண்ணீரை கிழக்கு நோக்கித்திருப்பிவேன். இதன் மூலம் வறட்சியாய் இருக்கும் தென்மாவட்டங்களை வளமான பகுதியாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன்.
மேலும் நம் பகுதியில் எலுமிச்சை,திராட்சை,மலர்கள், மதிப்புக் கூட்டக் கூடிய பொருட்களாக மாற்றமுடியாத நிலையுள்ளது. இதனை மாற்றிட முயற்சிகொள்வேன்.
குற்றாலத்தை உலக அளவில் சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன்,விருதுநகர்-கொல்லம் அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்க செய்து மின் பாதையாக மாற்றி தென்மாவட்டங்கள் பொருளாதாரத்தில் உயர முயற்சி மேற்கொள்வேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications