ஜொலிக்கும் கலங்கரை விளக்கம்… நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி
சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் பார்வைக்காக நாளை முதல் அனுமதிக்கப்படுகிறது.
காமராஜர் சாலையில் மெரினா கடற்கரை முடியும் இடத்தில் கலங்கரை விளக்கம் உள்ளது. 10 மாடிகளில் 45 மீட்டர் உயரம் உள்ள இந்த கலங்கரை விளக்கத்தில் பொதுமக்கள் ஏறி சென்னை நகரின் எழில்மிகு தோற்றத்தையும், வங்கக்கடலின் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம் மற்றும் அருங்காட்சியம் திறப்பு விழா நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் விழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கிறார்.

கப்பல் வழிகாட்டி
கலங்கரை விளக்கத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கோபுர விளக்கானது இரவு நேரத்தில் கப்பல்களுக்கு வழிகாட்டும் வகையில் சுழன்று செல்லும். இந்த கலங்கரை விளக்கம் 1977ம் ஆண்டு திறக்கப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி கலங்கரை விளக்கத்தில் பொதுமக்கள் ஏறிப்பார்க்க தடை விதிக்கப்பட்டது.

சென்னையின் அடையாளம்
சென்னையின் அடையாள சின்னங்களில் ஒன்றான கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கலங்கரை விளக்கத்தை மீண்டும் புதுப்பித்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்க உத்தரவிட்டார்.

லிப்ட் வசதியோடு
கலங்கரை விளக்கம் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழைய லிப்ட்டுக்கு பதிலாக புதிய லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது. 23 விநாடிகளில் 9-வது மாடியை சென்றடையலாம். அங்கிருந்து 25 படிக்கட்டுகளில் ஏறி 10-வது மாடியை அடையலாம்.

மெரினாவின் அழகு
10-வது மாடியில் இருந்து வங்கக்கடல் மற்றும் சென்னையின் எழில்மிகு தோற்றத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். 10-வது மாடி வரை செல்வதற்கு 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தள பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகம்
கலங்கரை விளக்கத்தின் தரைதளத்தில் புதிய அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கப்பல் போக்குவரத்துக்கு உதவிய பழங்கால சாதனங்களான எண்ணை விளக்குகள் பெட்ரோலியம் கேஸ் விளக்குகள், பர்னர்கள், மின்சார விளக்குகள், கேஸ் மோட்டார்கள், டெலஸ்கோப்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இவை பொது மக்களுக்கு மட்டுமின்றி கடல்சார் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அமைச்சர் ஜி.கே.வாசன்
கலங்கரை விளக்கம் மற்றும் அருங்காட்சியம் பொதுமக்கள் பார்வைக்காக நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கான விழா நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார். அத்துடன் இந்திய கடற்கரையில் நவ்டெக்ஸ் நெட்வொர்க் அமைக்கவும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் கலங்கரை விளக்கங்கள் தலைமை இயக்குனர் கேப்டன் ஏ.எம்.சூரஜ், கப்பல் துறை செயலாளர் விஸ்வபதி திரிபாதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

ஜொலிக்கும் லைட் ஹவுஸ்
20 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படுவதால் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கலங்கரை விளக்கத்தை சுற்றிலும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் அமர இருக்கை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

திங்கட்கிழமை லீவு
திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் சுற்றிப்பார்க்கலாம். பொதுமக்கள் பாதுகாப்புக்காக 20 இடங்களில் கண்காணிப்பு காமிராக்களும், டோர்மெட்டல் டிடெக்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை ஒழுங்குபடுத்தி அனுப்பவும், டிக்கெட் வழங்கவும், அவசர காலத்தில் உதவுவதற்கும் 10 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications