ராத்திரி நேரம்.. எரியாத விளக்குகள்.. வீடு வீடாக புகுந்து பெண்களிடம் சில்மிஷம்.. யார் இந்த கொடூரன்??
அம்பத்தூர் பகுதிகளில் தொடர் கொள்ளை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: அம்பத்தூர் அருகே ராத்திரி நேரத்தில் எரியாத தெருவிளக்குகளை சாக்காக வைத்து கொண்டு ஒரு மனிதன் வீடுகளுக்குள் புகுந்து மிரட்டி பாலியல் சில்மிஷம் செய்யும் செய்யும் அவலம் அரங்கேறி உள்ளது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை, பாடி, கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் ஒரு மர்ம மனிதன் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும், பிறகு வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி பாலியியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இப்படி 3 மாதங்களாகவே அந்த பகுதிகளில் அராஜகம் நடப்பதாகவும் அதோடு பணம் மற்றும் செல்போன்கள் எல்லாம் அந்த மர்ம மனிதன் திருடிக் கொண்டு போவதாகவும் புகார்கள் எழுந்தன.
[ ஆளுநரைத்தான் கைது செய்து விசாரித்திருக்க வேண்டும்.. பண்ருட்டி வேல்முருகன் அதிரடி ]

துண்டு கட்டிய மனிதர்
இதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தனர். அப்போது மண்ணூர்பேட்டை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு நடந்த காட்சி ஒன்றினை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் பாதிக்கப்பட்ட மக்கள் சொன்னதுபோலவே, ஒரு மர்ம மனிதன் கேஷூவலாக நடந்து வருகிறார். சிறிது நேரத்தில் அவர் கட்டிய துண்டுடன் தபதபவென ஓடுகிறார்.

துண்டுடன் ஓடுகிறார்
பிறகு இரவில் வீடு புகுந்த அந்த மர்ம மனிதன் ஸ்குரு டிரைவரை எடுத்து, தாழ்ப்பாள் போடப்பட்ட கதவை திறக்கிறார். உள்ளே நுழைந்து அங்கே தூங்கி கொண்டிருக்கும் பெண்களுக்கு பாலியியல் சீண்டலும், தொந்தரவும் தர முயல்கிறார். உடனே பெண்கள் கத்தி கூப்பாடு போடுகிறார்கள். அந்த நேரத்தில் உடனே கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் பணம், செல்போனை எடுத்து கொண்டு நகர்கிறான். பிறகு அந்த செல்போனை மட்டும் வேற ஒரு இடத்தில் விட்டுவிட்டு சென்று விடுகிறார்.

தெருவிளக்குகள் இல்லை
இதுபோன்று குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், தெருவிளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை என்று கூறப்படுகிறது. தெருவிளக்கு வேண்ம் என்று அதிகாரிகளிடம் கேட்டால், அலட்சியமான பதிலை சொல்கிறார்களாம். எனவே உடனடியாகயாகதெருவிளக்குகள் தொடர்ந்து எரிய வழிவகை செய்யவேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். காமிராவில் நடமாடிய மர்மமனிதனின் திருட்டு செயலார் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

யார் அந்த மர்ம மனிதன்
போலீசாரும், அந்த பகுதி மக்களும் இணைந்து போன வாரம் சிசிடிவி கேமராக்களை பல இடங்களில் பொருத்தியும் உள்ளனர். இதை தவிர இரவு நேரத்தில் ரோந்து பணியிலும் ஈடுபட்டும் வருகின்றனர். ஆனாலும் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை சீண்டி நகைகளை கொள்ளையடித்த அந்த மர்ம மனிதன் யார் என்றே தெரியவில்லை... இன்னமும் போலீசாரிடம் அகப்படவே இல்லை அந்த மர்ம மனிதன்!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications