புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்... 50 பேர் கைது
சென்னை: பூந்தமல்லி அருகேயுள்ள மாங்காடு பரணிபுத்தூர் - கோவூர் சாலையில் நேற்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடை முன்பு திரண்ட அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், மாணவிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்கள் கலைந்து செல்லாததையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாங்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் பள்ளிக் கூடம், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு இது மிகவும் இடையூறாக அமைந்துள்ளது.
மேலும் போரூர், அய்யப்பன்தாங்கல், மாங்காடு, கோவூர் பகுதிகளை இணைக்கும் சாலையும் இங்கு உள்ளது. இங்கு மதுக்கடை திறந்துள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பாக அமையும். எனவே இந்த மதுக்கடையை மூட வேண்டும்'' என்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications