கூவிக்கூவி பார்த்தும் சசிகலா தரப்பு கொடுத்த லட்டை திரும்பிக்கூட பார்க்காத ராமநாதபுரம் மக்கள்
ராமநாதபுரத்தில் சசிகலா ஆதரவாளர்கள் கொடுத்த லட்டை மக்கள் திரும்பிக்கூட பார்க்காததால் அவை சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததை கொண்டாடிய சசிகலா தரப்பினர் ராமநாதபுரத்தில் லட்டு விநியோகம் செய்தனர். அதனை பொதுமக்கள் சீண்டாததால் அவை அப்பகுதி சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 16அம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவ் சசிகலா தரப்பை ஆட்சிமைக்க அழைப்பு விடுத்தார். இதனை அப்பகுதி சசிகலா ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தா ... ராம்நாடுடா 💪💪 pic.twitter.com/4lpjuKVQ01
— 🇯️🇰️🇰️💮 (@iamkarthikeyank) February 17, 2017
ராமநாதபுரத்தில் சசியின் ஆதரவாளர்கள் தட்டு நிறைய லட்டுக்களுடன் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அதனை ஏறேறிட்டுக்கூட பார்க்கவில்லை.
வலிய வலிய சென்று கொடுத்தப் போதும் மக்கள் அதனை வாங்க மறுத்து விட்டனர். இதனால் செய்வதறியாது திணறிய சசிகலாவின் ஆதரவாளர்கள் அவற்றை பள்ளிக்கூட சிறுவர்களுக்கு வழங்கினர்.












Click it and Unblock the Notifications