சகாயம்,சீமானுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.. நடிகர் வேண்டுகோள்!
ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சீமான் ஆகியோர் மக்களுக்கு உண்மையாக போராடுவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சீமான் ஆகியோர் மக்களுக்கு உண்மையாக போராடுவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மக்கள் வாயப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசும் நிலையில் மாநில அரசு இல்லை என்று குற்றம்சாட்டினார்.

மத்திய அரசுக்கு கைகூலியாக மாநில அரசு செயல்படுகிறது என்றும் நடிகர் மன்சூர் அலிகான் கூறினார். தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாட்டை நல்ல தமிழர்களே ஆளவேண்டும் என்றும் மன்சூர் அலிகான் கூறினார். மக்களுக்காக உண்மையாக போராடக்கூடிய சகாயம்,சீமான் போன்றவர்களுக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழனின் அடையாளமாக இருக்கக்கூடிய கீழடியை மறைக்க நினைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் எடுபடாது என்றார். நெடுவாசல்,கதிராமங்கலம் போன்ற இடங்களில் முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மூலம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும இல்லையென்றால் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் எச்சரித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications