குடும்ப அட்டைதாரர்களை மசாலா பொடி வாங்க வற்புறுத்துவதா? ஈரோட்டில் ரேஷன் கடை முற்றுகை
ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: ஈரோட்டில் குடும்ப அட்டைதாரர்களை மசாலா பொடி வாங்க வற்புறுத்தும், நியாயவிலை கடையினை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு வளையகாரவீதியில் தந்தை பெரியார் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலை கடை உள்ளது. இந்த கடையின் மூலம் 2500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்த கடையில் விற்பனையாளர் ஒருவர் மட்டுமே உள்ளதால் பொருட்களை வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது என்பது பொதுமக்களின் புகாராகும். கூலி வேலைக்கு செல்லும் தாங்கள் வேலைக்கு செல்லாமல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் குடும்ப அட்டைதாரர்களை மசாலா பொடி வாங்க வற்புறுத்துவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நியாயவிலை கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட கடைக்கு கூடுதலாக ஊழியர்களை நியமிக்க வேண்டும், மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications