அப்படியே பாஜக எம்பி பொன்.ராதாகிருஷ்ணனையும் ராஜினாமா செய்ய சொல்லுங்க அக்கா!
அதிமுக எம்பி முத்துக்கருப்பனை போல் திமுக எம்பி கனிமொழியும் ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறிய தமிழிசையை பாஜக எம்பியான பொன் ராதாகிருஷ்ணனையும் ராஜினாமா செய்ய சொல்லுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: அதிமுக எம்பி முத்துக்கருப்பனை போல் திமுக எம்பி கனிமொழியும் ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறிய தமிழிசையை பாஜக எம்பியான பொன் ராதாகிருஷ்ணனையும் ராஜினாமா செய்ய சொல்லுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் மத்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கனிமொழி ராஜினாமா
இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் அதிமுக எம்பி முத்துக்கருப்பனை போல் திமுக எம்பி கனிமொழியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

பொன் ராதாகிருஷ்ணன்?
தமிழிசையின் இந்த பேச்சு பொதுமக்களிடையே மற்றொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கனிமொழியை ராஜினாமா செய்யக்கூறும் தமிழிசை தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பியான மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்யச் சொல்வாரா என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜக
தமிழக பாஜகவும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது என்பதை நிலைநாட்ட தமிழிசை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக எம்பியான பொன் ராதாகிருஷ்ணனும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

வரலாற்றில் இடம்பிடிக்குமா?
இதன் மூலம் காவிரிக்காக பதவியைத்துறந்த ஒரே தமிழக மத்திய அமைச்சர் என்ற பெருமை காங்கிரஸுக்கு (வாழப்பாடி ராமமூர்த்தி) உள்ளதை அடுத்து பாஜகவும் அந்த வரலாற்றில் இடம்பிடிக்கலாம். வரலாற்றில் இடம் பிடிக்குமா தமிழக பாஜக?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications