சபாஷ் ஓ.பி.எஸ்.. புதுச்சேரியிலிருந்து கண்ணன், ஓம்சக்தி சேகர் வாழ்த்து!

தமிழகத்தில் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. ஓம்சக்தி சேகர் தலைமையில் ஏராளமானோர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி கண்ண

Subscribe to Oneindia Tamil

சென்னை: மன்னார்குடி குடும்பத்திற்கு எதிராகவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராகவும் ஓ.பன்னீர் செல்வம் உயர்த்தியுள்ள போர்க்கொடி தமிழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் அதிமுக தொண்டர்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்கிழமை இரவு மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் முன்பு தியான புரட்சி நடத்திய ஒ.பன்னீர் செல்வம், தொடர்ச்சியாக சசிகலாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

Pudhucherry Kannan and Om sakthi Sekar support for OPS

இதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரியிலும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவை புதுவை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வரவேற்றுள்ளார். அவர் நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு இனிப்பும் வழங்கி கொண்டாடினார்.

நேற்று சென்னைக்கு நேரில் வந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார் செய்தியாளர்களிடம் பேசிய ஓம்சக்தி சேகர், சகோதரர் ஓபிஎஸ் கரங்களை வலுப்படுத்துவோம் என்றார். சகோதரி தீபாவும் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புதுவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான கண்ணன் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது கண்ணனுக்கு அ.தி.மு.க.வில் தேர்தல்பிரிவு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. தமிழகத்தில் அதிமுக சட்டசபைக் கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்த உடனேயே அதிமுகவில் இருந்து விலகுவதாக கண்ணன் அறிவித்தார்.

சசிகலாவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதைப் பற்றி கருத்து கூறிய கண்ணன், ஓபிஎஸ் கூறியதை பாராட்டாமல், வாழ்த்தாமல் இருக்க முடியாது. இதற்கு பன்னீர்செல்வத்துக்கு சபாஷ் தெரிவித்து கொள்கிறேன். அவர் எடுத்துள்ள நிலைப்பாடு, தைரியம், நேர்மைக்கு தலை வணங்குகிறேன். அவரது நேர்மை வெற்றி பெற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+