நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம்... உருவ பொம்மைகளை எரித்து பாஜக போராட்டம்: வீடியோ

புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், நியமன எம்.எல்.ஏக்கள் சம்பந்தமான ஆளுநரின் கோப்புகளை திருப்பி அனுப்பியதால் பாஜகவினர் முதல்வர் மற்றும் சபாநாயகரின் உருஅ பொம்மைகளை எரித்துப் போராட்டம் நடத்தினர்.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் நியமன எம்.எல்.ஏக்கள் சம்பந்தமான கோப்புகளை திருப்பி அனுப்பிய காரணத்தால், பாஜகவினர் சபாநாயகர் மற்றும் முதல்வரின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பாஜகவைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏக்களாக யாருக்கும் தெரியாமல் தன் ஆளுநர் மாளிகையில் ரகசியமாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி பிரமாணம் செல்லாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அனைத்து அமைச்சர்களும் கூறினர்.

Puducherry Bjp persons staged protest against speaker and chief minister

ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியோ 'நான் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் எம்.எல்.ஏக்களை நியமனம் செய்தேன்' என கூறிவந்தார். மேலும் ஆளுநர் ஆலுவலகத்திலிருந்து நியமன எம்.எல்.ஏக்கள் தொடர்பான கோப்புகள் சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், சபாநாயகர் வைத்திலிங்கம் அந்த கோப்புகளை திரும்ப அனுப்பிவிட்டார். இதனால் பாஜகவினர் கொதித்தெழுந்தனர். அதைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் முதல்வரின் உருவ பொம்மைகளை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து பேசிய புதுவை பாஜக செயலாளர் ரவிச்சந்திரன், ''நியமன எம்.எல்.ஏக்கள் கோப்புக்களை திருப்பி அனுப்பிய சபாநாயகருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என எண்ணுகிறோம். மேலும், புதுவையில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்'' என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+