முதல் பட்ஜெட் வரும் 29-ல் தாக்கல்- புதுவை முதல்வர் நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கான பட்ஜெட் வரும் 29ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
நாராயணசாமியின் தலைமையில் காங்கிரஸ் புதுவையில் ஆட்சி அமைத்தப் பின்னர் பட்ஜெட் தாக்கல் எப்போது செய்வது என்பது குறித்து பல்வேறு கட்டமாக கூட்டங்கள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே, வரும் 24ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்று புதுச்சேரி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, வரும் 29ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நிதிநிலை அறிக்கையில் எந்தந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், பல்வேறு துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications