புதுச்சேரியில் 4வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. மக்கள் அவதி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது. ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

தினக்கூலியாக மாற்றும் வரை பேருந்துகளை இயக்க போவதில்லை என ஒப்பந்த ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புதுச்சேரி போக்குவரத்துக்கழக இயக்குநருடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டதாகவும் வெளியான தகவலை ஊழியர்கள் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications