விரைவில் புதுச்சேரி டூ ஹைதராபாத் விமான சேவை - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு: வீடியோ
புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவுக்கு விமான சேவை புதன்கிழமையிலிருந்து தொடங்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவுக்கு விமான சேவை வரும் புதன்கிழமையிலிருந்து தொடங்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, வரும் புதன்கிழமையிலிருந்து ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவுக்கு விமான சேவை தொடங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், துணை நிலை ஆளுநர் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் பல நாட்கள் கோப்புகளை நிலுவையில் வைத்திருந்தார் என அவர் குற்றம்சாட்டினார். புதுச்சேரியில் ஒரு பாஜக எம்.எல்.ஏ கூட இல்லாத நிலையில், ஆட்சியை பிடிப்போம் என பாஜக எந்த நம்பிக்கையில் கூறிவருகிறது என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications