பொங்கலுக்கு அரிசி உட்பட 6 பொருட்கள் “ஃப்ரீ” ... இது புதுச்சேரியில்!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி மக்களுக்கு அரிசி உள்பட 6 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், ''பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கிலோ அரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் இலவசமாக வழங்கப்படும். அதேபோல், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து, வெல்லம் ஆகியவை தலா அரை கிலோ இலவசமாக வழங்கப்படும்.
இந்த பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்'' எனக் கூறியுள்ளார். ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் வருகையின் அடிப்படையில் இந்த பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications