கோலிவுட் சூர்யாவிலிருந்து, பாலிவுட் டாம் குரூஸ் வரை விதவிதமான "அவதாரத்தில்" ரங்கசாமி!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்காசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள போஸ்டர்களால் புதுச்சேரியே கலகலத்துப் போனது.

புதுவை மாநில முதல்வர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள் விழா. ரங்கசாமிக்கு இன்றுடன் 64 வயது பூர்த்தி அடைந்து 65 ஆவது வயது பிறந்துள்ளது.

இதனை என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் மாநிலம் முழுவதும் கொண்டாடினர்.

திரண்ட தொண்டர்கள்:

திரண்ட தொண்டர்கள்:

இன்று அதிகாலை முதலே ரங்கசாமியின் வீட்டு முன்பு திரண்ட தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று முதல்வர் ரங்கசாமிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து, நினைவு பரிசு அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுகை முழுதும் பேனர்கள்:

புதுகை முழுதும் பேனர்கள்:

இதுமட்டுமல்லாமல் தங்களுடைய வாழ்த்துக்களை முதல்வர் ரங்கசாமிக்கு தெரிவிக்கும் வகையில் புதுவை நகரம் முழுவதும் பேனர்களும், கட்அவுட்களும் வைத்திருந்தனர்.

புதுமையான வாழ்த்து:

புதுமையான வாழ்த்து:

வழக்கமாக அரசியல் கட்சி தலைவர்களை தொண்டர்கள் அவருடைய உருவ படங்களை மட்டுமே பேனர்களில் பயன்படுத்தி வாழ்த்து தெரிவிப்பது உண்டு.

கட்சித் தொண்டர்களின் விருப்பம்:

கட்சித் தொண்டர்களின் விருப்பம்:

ஆனால், புதுவை முதல்வர் ரங்கசாமியை அவரது கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் தாங்கள் பார்க்க விரும்பும் கடவுள்கள், தலைவர்கள் வடிவங்களில் எல்லாம் பேனர்கள் அமைத்து வாழ்த்து தெரிவிப்பது உண்டு.

ஏசு, அனுமான் ரூபத்தில் ரங்கசாமி:

ஏசு, அனுமான் ரூபத்தில் ரங்கசாமி:

இந்த ஆண்டு முதல்வர் ரங்கசாமியை அவரது கட்சி தொண்டர்கள் ஏசு, அனுமான் வடிவத்தில் அமைத்து வாழ்த்து தெரிவித்தனர். இதோடு ஹாலிவுட் திரைப்பட ஹீரோக்களான டாம்குரூஸ், சில்வர்ஸ்டர் ஸ்டோலன், அர்னால்டு போன்றும், தமிழ் திரைப்பட நடிகர்களான ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜித் உருவங்களில் பேனர்களில் அமைத்திருந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியம்:

சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியம்:

இதுதவிர சிங்கத்தை வீழ்த்தி அதன் மீது நிற்பது போன்றும், புலியை வேட்டையாடி கழுத்தில் சுமப்பது போன்ற பேனர்களும் இடம் பெற்றிருந்தன.

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்த மக்கள் இதையும் சேர்த்து வேடிக்கை பார்த்து, ரசித்து சிரித்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+