நாராயணசாமி போட்ட முதல் பட்ஜெட்.. எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதன் முறையாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நீண்ட இழுபறிக்கு பின்னர் முன்னாள் எம்பி நாராயணசாமி புதுச்சேரியின் முதலமைச்சராக ஆனார். இதனைத் தொடர்ந்து சென்ற வாரம் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடந்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து, இன்று 2016-17 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கியமான பகுதிகள் ஆன்லைனில் வெளியானதாகக் கூறி அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் வைத்திலிங்கத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications