புதுச்சேரி அரசுடன் உச்சக்கட்ட மோதல்: ஒத்துழைப்பு தராத அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டார் கிரண்பேடி!
ஒத்துழைப்பு தராத அரசு அதிகாரிகளின் பட்டியலை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: தனக்கு ஒத்துழைப்பு தராத அரசு அதிகாரிகளின் பட்டியலை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மாநில அரசுக்கும் கிரண் பேடிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில் முரண்டுபிடிக்கும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் அனலை கிளப்பியுள்ளது.
முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசுக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையேயான அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது குறித்த அரசுக்கும் கவர்னருக்குமான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் மக்கள் பிரச்சனை தொடர்பாக தான் கேட்கும் தகவல்களை அரசு அதிகாரிகள் கொடுப்பதில் என குற்றம்சாட்டிய கவர்னர் கிரண்பேடி தனக்கு ஒத்துழைப்பு அளிக்காத அரசு அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
|
டிவிட்டரில் பட்டியல் வெளியிடு
இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் பட்டியலில் புதுச்சேரி தலைமை செயலாளர் மனோஜ்பரிதா, நிதித்துறை செயலாளர் கந்தவேலு உள்ளிட்ட 10 செயலாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் கடந்த 28 வாரங்களாக கேட்ட தகவல்களை தரவில்லை எனவும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
|
வளர்ச்சி திட்டங்கள் பாதிப்பு
அந்த பட்டியலை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் டிவிட்டர் பக்கங்களிலும் அவர் இணைத்துள்ளார். மேலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காமல், கேட்ட தகவலை தராததால் புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒழுங்கீனமாக நடக்கிறார்கள்
அதிகாரிகள் அரசியல் ரீதியாக, விதிமுறைகளை மீறி ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர்களின் ஒட்டுமொத்த பணியும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் பதிவுகளால் பரபரப்பு
வளர்ச்சி திட்டங்களும் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கிரண்பேடி டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில் கிரண் பேடியின் இந்த டிவிட்டர் பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications