ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு புதுவை முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

புதுவை மாநிலம் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பை புதுச்சேரி அரசு எதிர்க்கும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: இதுதொடர்பாக புதுச்சேரி சட்ட பேரவையில், நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார்.

Puducherry Govt opposes hydro carbon plan from central govt

மேலும் இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புதுச்சேரி அரசு இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளாது என்று கூறினார். மாநில அரசு அனுமதியில்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, சட்டசபை வன்முறையை கண்டித்து திமுக நடத்தும் உண்ணா விரதம் போராட்டத்தை புதுச்சேரி காங்கிரஸ் ஆதரிக்கும் என்றார். மேலும் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு ஆளுங்கட்சி வெற்றி பெற்றதாக அறிவித்தால் அதை ஜனநாயகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+