அது என்ன பெரிய மண்டை.. சின்ன மண்டை??

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: மது விலக்கு, அதற்காக போராட்டம், அடிதடி, கன்னத்தில் பளார் பளார்.. என ஒரு உலகம் போராட்டக் களத்திலேயே பொங்கிக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் மது வியாபாரம் அமோகமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த வியாபார அறிவிப்பைப் பாருங்களேன். இது புதுச்சேரியின் கருவடிக்குப்பம் பகுதியில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர். சமூக வலைதளத்தில் காணக் கிடைத்தது.

Puducherry liquor shop advt lures many

குடிமக்களுக்கு ஏற்ற வகையில் மிகத் தெளிவாக, பிரித்து எழுதியுள்ளனர். சோடா, கலர் முற்றிலும் இலவசம் பாஸ் அது முக்கியம். பிறகு முக்கியமான இன்னொரு விஷயம், சரக்கை வாங்கி டக்குன்னு வாயில் ஊத்திடாதீங்க, அளவு சரியா இருக்கான்னு பாத்துட்டு பிறகு ஊத்திக் குடிங்க. கம்மியா இருந்தா கம்பெனி பொறுப்பு கிடையாது.

ஆமா, அது என்ன பெரிய மண்டை, சின்ன மண்டை?. அது என்னாவா வேணும்னாலும் இருக்கட்டும். நமக்கு அதுவா முக்கியம், மேக்ஸிமம் 40 ரூபாய்தான் பாஸ், அதுதான் மேட்டர்!

சியர்ஸ்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Puducherry based liquor shop advt has lured many in Karuvadikuppam near the union territory.
Please Wait while comments are loading...