புதுவையில் அமைச்சரின் உதவியாளர் சரமாரி வெட்டிக் கொலை.. 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
புதுவையில் அமைச்சரின் உதவியாளர் பட்டப்பகலில் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை: புதுவை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர் வீரப்பன் என்பவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் செய்தித் தொடர்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வந்தவர் கந்தசாமி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் கவுன்சிலரும் ஆவார்.

இந்தநிலையில் இன்று காலை அமைச்சர் கந்தசாமியின் அலுவலகத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கடலூர் - புதுச்சேரி சாலையில் உள்ள காட்டுப்பாளையம் அருகே வந்தபோது அங்குள்ள ஓடை புதரில் மறைந்திருந்த 10 பேர் கும்பல் திடீரென அவரை வழிமறித்து கீழே தள்ளியது. பைக்குடன் அவர் கீழே விழுந்ததும் அக்கும்பல் அரிவாளால் வீரப்பனை சரமாரியாக வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த வீரப்பன் உயிருக்குப் போராடினார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று வீரப்பனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வீரப்பன் சிறிதுநேரத்தில் இறந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரெட்டிச்சாவடி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சரின் உதவியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், ஈச்சங்காடு உள்ளிட்ட பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே திரண்டனர். இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications