புதுச்சேரி விபச்சார வழக்கு – சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றம்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த வாரம் பதிவான ஒரு வழக்கில் சிறுமிகளைக் கடத்தி விபசாரத்தில் தள்ளியதாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது.இந்தப் புகார் குறித்த விசாரணையில் சின்னஞ்சிறுமிகளை அவர்கள் விபசாரத்தில் கட்டாயப் படுத்தி தள்ளி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து புதுவையை சேர்ந்த அருள்மேரி, புஷ்பா, ரகுமான், காயத்திரி, மாணிக்கம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சிறுமிகளையும் போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவத்தில் 14 வயது சிறுமி கைக்குழந்தையுடன் மீட்கப்பட்டார். கைதான 5 பேர் மீதும் போலீசார் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம், விபசாரம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு தற்போது பாலியல் வன்முறை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அறையில் உள்ள மாணிக்கம், ரகுமான் ஆகியோர் மீது 376 சட்ட பிரிவின்கீழ் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications