ஓபிஎஸ் கோஷ்டியில் தொடர்ந்து ஐக்கியமாகும் மாஜி எம்.எல்.ஏக்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரும் இணைந்து வருகிறார்கள். அதில் லேட்டஸ்ட், புதுக்கோட்டை தொகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகர் ஆகும்.
சசிகலா கோஷ்டிக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார். படிப்படியாக மொத்தம் 12 எம்எல்ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் வந்தனர். எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்களை பிடித்து வைத்திருந்த நிலையிலும் அவர்களை பிரித்து கூட்டி வர பன்னீர் அணியால் முடியவில்லை. ஆட்சி எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பதால் அவர்கள் அங்கு இருக்கவே விரும்புகிறார்கள்.

இருப்பினும், முன்னாள் எம்எல்ஏக்ள் பலரும் ஓ.பி.எஸ் பக்கம் வருகிறார்கள். வீரபாண்டி செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி, வெங்கடாஜலம், செல்வராஜ், நடேசன், ரவிச்சந்திரன், ஓமலூர் சிவபெருமான், பல்பாக்கி கிருஷ்ணன், ஆத்தூர் மாதேஸ்வரன், கெங்கவல்லி அழகம்மாள் உள்ளிட்ட பல மாஜி எம்எல்ஏக்கள் ஓ.பி.எஸ் அணியில் உள்ளனர். இந்த மாஜி எம்எம்ஏக்கள் பட்டியலில் ராஜசேகர் புதிதாக சேர்ந்துள்ளார்.
ராஜசேகர், புதுக்கோட்டை தொகுதி சிட்டிங் அதிமுக எம்எல்ஏ என தவறுதலாக நேற்று 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட்டில் செய்தி வெளியிட்டுவிட்டோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications