"கஜினி"யாக படையெடுக்கும் பெரியண்ணன் அரசு.. புதுக்கோட்டை மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: 2 முறை தோல்வியைத் தழுவிய நிலையிலும் 3வது முறையாக வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார் புதுக்கோட்டை திமுக வேட்பாளர் பெரியண்ணன் அரசு.
புதுக்கோட்டை மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா.
பெரியண்ணன் அரசு
புதுக்கோட்டையில்
பெரியண்ணன் அரசு போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் இவர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மேலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன். திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர், சுமார் 25 ஆண்டுகள் திமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்தார். 2 முறை புதுக்கோட்டை தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். பெரியண்ணன் மறைவுக்குப் பிறகு அவரது மகன் பெரியண்ணன் அரசு மாவட்டச் செயலாளராக உள்ளார். புதுக்கோட்டையில் குடும்பத்தோடு வசித்து வரும் இவர், புதுக்கோட்டை தொகுதியில் கடந்த 2001-ல் அதிமுக வேட்பாளரிடமும், 2011-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரிடமும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
சிவ.வீ. மெய்யநாதன்
ஆலங்குடியில் போட்டியிடுகிறார் மெய்யநாதன். சொந்த ஊர் அறந்தாங்கி. அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவராக இருந்து வருகிறார். பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான மறமடக்கியில் முடித்து இளங்கலை கல்லுரி படிப்பை புதுக்கோட்டை மன்னார் கல்லுரியில் முடித்தார்.. மன்னார் கல்லூரியில் படிக்கும் பொழுது மாணவர் மன்ற தலைவராகவும் (சேர்மன்) பொறுப்பேற்று இருந்தார். 1996-ல் தனது 26வது வயதில் மறமடக்கி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001- ல் மீண்டும் மறமடக்கி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றார்.
எஸ்.ரகுபதி
முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.
ரகுபதி திருமயம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். செட்டியார் சமூகத்தச் சேர்ந்தவர். புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவில் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருமயம் தொகுதியில் போட்டியிட்டு வென்று தொழிலாளர் நலன் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக 1996 வரை பணியாற்றியுள்ளார். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் அதிமுகவில் இருந்து விலகி 2000ம் ஆணடு திமுகவில் இணைந்தார். அதன் பின் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 முதல் 2007 வரை மத்திய உள்துறை இணை அமைச்சர் பின்னர் 2009 வரை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
எம்.பழனியப்பன்
விராலிமலை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
பழனியப்பன். விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் என்ற கிராமத்தில் வசித்த்து வருகிறார். பி.எஸ்.சி. பி.எட். படித்துள்ளார். தொழில் விவசாயம். கடந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.
டாக்டர் கே. அன்பரசன்
கந்தர்வகோட்டை தனி தொகுதி வேட்பாளராக கு.
அன்பரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை குழந்தைவேல். தாய் ராயபாக்கியம். இவரது மனைவி ராஜேஸ்வரி. சிவானி என்ற மகளும், கோகுலவாசன் என்ற மகனும் உள்ளார். இவர் தற்போது பிலாவிடுதி ஊராட்சியில் உள்ள மானியவயல் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் எம்.பி.பி.எஸ், எம்.எல். படித்து முடித்து உள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications