உரலுக்கு ஒரு பக்கம், இவருக்கு 4 பக்கம் இடி - அய்யோ பாவம் 'அண்ணன்'!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை திமுக மாவட்ட செயலாளர் பெரிண்ணன் அரசு பெரும் கலக்கத்தில் உள்ளாராம்.
காரணம், எல்லோருக்கும் ஒரு வேலை என்றால் இவருக்கு நான்கு வேலைகளைத் தூக்கிக் கொடுத்துள்ளனராம்.
அதாவது தனது மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் நான்கு மாவட்டத் தொகுதிகளுக்குள் வருவதால் நாலாபுறமும் சுற்றிச் சுழன்று வேலை பார்க்க வேண்டியுள்ளதாம்.

நான்கு தொகுதிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டசபைத் தொகுதிகள் , திருச்சி, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை என நான்கு நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகின்றதாம்.

நான்கு விதமான வியூகம்
இதனால், புதுக்கோட்டை திமுக மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு 4 வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் வியூகத்தை வகுத்து, செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளாராம்.

24 மணி நேரமும் அதே நினைப்புத்தான்
இதனால் பகல் , இரவு என 24 மணி நேரமும் தேர்தல் பரிசாரத்திலேயே காலம் கழிகின்றதாம்.

வீட்டுப் பக்கம் கூட போக முடியலையேப்பா
மனிதர் மறந்தும் கூட வீட்டு பக்கம் தலை காட்டுவதில்லையாம்.

5 செட் வேட்டி சட்டை ரெடி...
எங்கு போனாலும் கூடவே, 5 செட் வேஷ்டி, சட்டையை எடுத்து வந்து விடுகிறாராம். அவ்வப்போது அதை மாற்றிக் கொண்டு தேர்தல் பிரசாரத்திற்கு கிளிம்பி விடுகின்றாராம்.

விழுந்து விழுந்து
மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது, அண்ணே இந்த தேர்தல் திமுகவுக்கு !பெரிய சோதனையான தேர்தல். எனவே, நம் கட்சி ஆளுங்க வெற்றி பெற்றே ஆக வேண்டும். எனவே திமுக வேட்பாளர்களும், நிர்வாகிகளும் யார் காலிலும் விழத் தயங்க வேண்டாம். அதற்கு முன் உதாரணாக நானே உங்க காலில் விழுகின்றேன் என மேடையிலேயே அனைவரது காலில் விழுந்து வாக்கு கேட்கின்றாராம்.

திமுகவுக்கா.. அண்ணனுக்கா.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு
இந்த தேர்தல் திமுகவுக்கு சோதனையா அல்லது அண்ணனுக்கு சோதனையா எப்படியோ, எல்லோர் காலில் விழுந்து மனிதர் தப்பித்துக் கொண்டார் என அவரது எதிர்கோஷ்டி இதற்கும் அரசியல் சாயம் பூசுகின்றதாம்.
அதானே, நல்லது நினைச்சாலும், செஞ்சாலும் நம்ப மாட்டாங்களே...!
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications