பாஜகவை பஞ்சாப் மக்கள் தூக்கி எறிந்துள்ளனர்.. திருநாவுக்கரசர் மகிழ்ச்சி
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவை அம்மாநில மக்கள் தூக்கி எறிந்துள்ளனர் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர் என்று அம்மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், பஞ்சாப் மாநில மக்கள் பாஜகவை தூக்கி எறிந்துள்ளனர் என்று கூறினார். மேலும், மக்கள் ஏற்காததால்தான் பஞ்சாப்பில் பாஜக தோற்றுப் போனது என்று தெரிவித்த திருநாவுக்கரசர், கோவாவிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும் மாநில பிரச்னைகளின் அடிப்படையில்தான் அந்தந்த மாநிலத் தேர்தல் முடிவுகளை பார்க்க வேண்டுமே ஒழிய ஒட்டு மொத்த இந்தியாவிற்கான தேர்தல் முடிவுகளாக இதனை பார்க்கக் கூடாது என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன் என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications