'புரட்சி தோழி'- சசிகலாவுக்கு அதிமுகவினர் தந்த பட்டம்! சென்னையில் போஸ்டர்கள் கிழிப்பு!!
சசிகலாவை அதிமுகவினர் புரட்சி தோழி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். சென்னையில் சசிகலா போஸ்டர்களும் கிழிக்கப்பட்டுள்ளன.
சென்னை: அதிமுக தலைமையை ஏற்க தயாராகி வரும் சசிகலாவுக்கு புரட்சி தோழி என்ற பட்டத்தை சூட்டியியிருக்கிறார்கள் அதிமுகவினர். அதே நேரத்தில் சென்னையில் சில இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை முன்னிறுத்தினாலும் தொண்டர்கள் அதை ஏற்க மறுத்து வருகின்றனர்.

சென்னையில் ஜெயலலிதா படத்தைவிட பெரிதாக சசிகலா படம் அச்சிடப்பட்டிருந்த போஸ்டரை அதிமுக தொண்டர்கள் கிழித்து எறிந்தனர். இதனிடையே ஜெயங்கொண்டம் பகுதியில் சசிகலாவுக்கு 'புரட்சி தோழி' என்ற பட்டம் கொடுத்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்..
ஏற்கனவே சின்னம்மா, அம்மாவின் ஆளுமையே என்றெல்லாம் சசிகலாவை அதிமுகவினர் அழைத்தும் வருகின்றனர். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சசிகலா தலைமையை ஏற்க முடியாது என அதிமுக தொண்டர்கள் தொடர்ந்தும் பதிவிட்டு வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கே சசிகலாதான் காரணம் எனவும் அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications