சீட்டு பத்தலையாம்... பாஜக கூட்டணியில் இருந்து ஏ.சி. சண்முகத்தின் கட்சி விலகல்!
சென்னை: பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த புதிய நீதி கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில சிறிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கட்சிகளுடன் பாஜக தலைவர்கள் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கட்சிகள் கேட்ட தொகுதிகளை கேட்டு பாஜக தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கேட்ட தொகுதிகளை தர முடியாது, குறைவான தொகுதிகளே தர முடியும் என்று பாஜக தரப்பில் கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டு, மீதியுள்ள தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது. ஏனென்றால் நாளை திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதில், பாஜ வேட்பாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக நேற்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர்ராவ், அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், பொது செயலாளர் மோகன்ராஜூலு உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் பாரிவேந்தரின் ஐ.ஜே.கேவுக்கு 45 தொகுதிகளும், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு 24 தொகுதிகளும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டனர். இதனிடையே பேச்சுவார்த்தையில் கேட்ட தொகுதிகள் ஒதுக்காததாக கூறி புதிய நீதிக்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
இதுவரை பாஜக 84 தொகுதி, ஐ.ஜே.கே., 54 தொகுதிகள், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் 24 தொகுதிகள் என 153 தொகுதகிள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய நீதி கட்சி கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் மீதமுள்ள தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications