ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி, ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா மனு தக்கல்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாராம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாராம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதற்காக இன்று காலை ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்து அலுவலர் சிவகாமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல ராமநாதபுரம் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் ஜவாஹிருல்லா, இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று காலை 11.40 மணியளவில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், அந்த தொகுதியின் தேர்தல் அலுவலரான ராம பிரதீபனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சைதாபேட்டை தொகுதி போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான அலை வீசுவதாக கூறினார்.
இதேபோல வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications