திமுக கூட்டணியில் விரைவில் புதிய தமிழகம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி இணையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக போட்டியிட்ட புதிய தமிழகம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ராஜ்யசபா தேர்தலில், திமுக வேட்பாளர் கனிமொழியை, புதிய தமிழகம் ஆதரித்து வெற்றிக்கு உதவியது.

லோக்சபா தேர்தலில், தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக கிருஷ்ணசாமிக்கு சீட் தரப்பட்டது. ஆனால் அதில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

Puthiya Tamilagam party may be form an alliance with DMK

வரும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில், புதிய தமிழகம் இடம் பெறுவதற்கு முயற்சி செய்தது. ஆனால் திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதனால் புதிய தமிழகம் நிலைப்பாடு கேள்விக்குறியானது.

இந்நிலையில், கனிமொழி ஆதரவாளர்கள் கிருஷ்ணசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு அளித்ததன் நன்றிக்கடனாக கனிமொழி ஆதரவாளர்கள், கிருஷ்ணசாமியிடம் பாசம் காட்டுவதாக தெரிகிறது.

எனவே, இன்னும் சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதியை கிருஷ்ணசாமி சந்தித்து, கூட்டணியை உறுதி செய்வார் என்று, திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+