புதிய தமிழகம் கட்சியின் 4 வேட்பாளர்கள் அறிவிப்பு- ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் 4 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அக் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.

வேட்பாளர்கள் விவரம்:
ஒட்டப்பிடாரம்- டாக்டர் கிருஷ்ணசாமி
வாசுதேவநல்லூர்- அன்பழகன்
ஸ்ரீவில்லிப்புத்தூர்- முத்துக்குமார்
கிருஷ்ணராயபுரம்- வி.கே. அய்யர்
1996, 2011 சட்டசபை தேர்தல்களில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றவர் டாக்டர் கிருஷ்ணசாமி. தற்போது மீண்டும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி களம் இற்னக்குகிறார்.












Click it and Unblock the Notifications