ஜெ., கருணாநிதி, ஸ்டாலின் எந்த தலைவரின் கையில் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் தெரியுமா?
சென்னை: ஏழைகளுக்காக பணிபுரியும் தலைவர்கள் பட்டியலில் முதல்வர் ஜெயலலிதா 25.40 சதவிகித மக்களின் ஆதரவைப் பெற்று முன்னிலையில் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி இரண்டாவது இடத்திலும், திமுக பொருளாளர் ஸ்டாலின் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. எந்த தலைவரின் கையில் தமிழ்நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயலலிதாவிற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறது புதியதலைமுறை தொலைக்காட்சி.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளநிலையில் தொலைக்காட்சிகள், இணையதளங்கள், ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் களைகட்டியுள்ளன. புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழக மக்களிடம் பல கேள்விகளை முன்வைத்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
அதில் ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு வாக்களிக்க மக்கள் முதன்மைப் படுத்தும் காரணிகள், திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க மக்கள் முதன்மைப்படுத்தும் காரணிகள், தமிழ்நாட்டின் எதிர்காலம் எந்த தலைவரின் கையில் பாதுகாப்பாக இருக்கும்,ஏழைகளுக்காக பணிபுரியும் அரசியல் தலைவர் யார்?,உங்களைக்கவர்ந்த அரசியல் தலைவர் யார்? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன.
தமிழகத்தை கடந்த 50 ஆண்டு காலமாக ஆண்ட திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு, கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலினுக்கு மக்கள் வாக்களிக்க விரும்புவதற்காக காரணங்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க மக்கள் முதன்மைபடுத்தும் காரணிகள்
வாக்காளர்களிடம் பெற்றுள்ள நம்பிக்கை 24.09 %
ஏழைகளுக்காக பணிபுரிபவர் 25.40 %
மக்களைக் கவரும் திறன் 22.22 %

கருணாநிதி
கருணாநிதிக்கு வாக்களிக்க மக்கள் முதன்மைபடுத்தும் காரணிகள்
வாக்காளர்களிடம் பெற்றுள்ள நம்பிக்கை 12.67 %
ஏழைகளுக்காக பணிபுரிபவர் 19.01 %
மக்களைக் கவரும் திறன் 22.96 %

ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு வாக்களிக்க மக்கள் முதன்மை படுத்தும் காரணிகள்
வாக்காளர்களிடம் பெற்றுள்ள நம்பிக்கை 12.90 %
ஏழைகளுக்காக பணிபுரிபவர் 5.74%
மக்களைக் கவரும் திறன் 4.54 %

திமுக - அதிக
திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க மக்கள் முதன்மைப்படுத்தும் காரணிகள்
நல்லாட்சி - அதிமுக - 34.48%, திமுக 33.33%
ஊழலற்ற அரசு - அதிமுக - 23.68 % திமுக 19.12 %
சட்டம் ஒழுங்கு அதிமுக - 36.65% திமுக 29.63%
வாக்குறுதி நிறைவேற்றம் - 31.83% சதவிகிதம் 27.66%
விலைவாசி கட்டுப்பாடு - அதிமுக 27.79% திமுக 35.41%
ஏழைகளின் நலன் அதிமுக - 35.04% 30.96%
பொது விநியோகம் அதிமுக - 37.06% திமுக 31.52%

தமிழ்நாட்டின் எதிர்காலம்
எந்த தலைவரின் கையில் தமிழ்நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயலலிதாவிற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
ஜெயலலிதா 24.09 %
கருணாநிதி 12.67%
ஸ்டாலின் 12.90%
விஜயகாந்த் 3.85%
மற்றவர்கள் 10.34%

ஏழைகளுக்காக பணிபுரியும் அரசியல் தலைவர் யார்?
ஜெயலலிதா 25.40 %
கருணாநிதி 19.01%
ஸ்டாலின் 5.74%
விஜயகாந்த் 2.48%
மற்றவர்கள் 30.37%

உங்களைக்கவர்ந்த அரசியல் தலைவர் யார்?
ஜெயலலிதா 22.22 %
கருணாநிதி 22.96%
ஸ்டாலின் 4.54%
விஜயகாந்த் 3.06%
மற்றவர்கள் 29.45%
கருத்து கூற விரும்பவில்லை 17.75%

விலைவாசியை கட்டுப்படுத்திய திமுக
இதில் பல கேள்விகளுக்கு மக்களின் ஆதரவு ஜெயலலிதாவிற்கே கிடைத்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் நல்லாட்சி, ஊழலற்ற அரசு, சட்டம் ஒழுங்கு, வாக்குறுதி நிறைவேற்றம், ஏழைகளின் நலன், பொது விநியோகம் ஆகியவை அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பாக இருந்தது என்று மக்கள் தெரிவித்துள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications