பேசாம பெரியார் தி.க. மாதிரி இருந்துடலாம்... வைகோ மீது கடும் கோபத்தில் மதிமுக தொண்டர்கள்!!
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கப் போவதாக அக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அதிமுக சார்பில் தஞ்சாவூரில் எம்.ரெங்கசாமி, அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் முன்னாள் எம்எல்ஏவான ஏ.கே.போஸ் போட்டியிடுகின்றனர். 3 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக பாமக, பாஜக அறிவித்துள்ளன. திமுக சார்பில் அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாமக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தேமுதிக இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் 3 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை.இதன் காரணமாக இந்த மூன்று தொகுதி சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் முடிவை மக்கள் நலக்கூட்டணி எடுத்துள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications