ஆர்.கே.நகர், திருவாரூர் தொகுதிகளுக்காக மல்லுக் கட்டிய ம.ந.கூ கட்சிகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் ஆர்.கே.நகர், திருவாரூர் தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்துமே மல்லுக்கட்டியதால்தான் தொகுதிகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தேமுதிக- ம.ந.கூ. கூட்டணியில் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன....அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடுவோம் என கடந்த ஒருவார காலமாக நாள்தோறும் அக்கூட்டணி தலைவர்கள் கூறிவருகின்றனர். ஆனால் தொகுதிகள் ஒதுக்கீடு இன்னமும் இறுதியாகவில்லை

இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்தோ, வேட்பாளர்கள் பட்டியலை ஒரே நாளில் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை என தவணை கணக்கில் நேற்று வெளியிட்டார். ஆனால் மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளோ தங்களுக்கான பல தொகுதிகளை தேமுதிக கபளீகரம் செய்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டதாக புலம்பி வருகின்றன.
அத்துடன் முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து தாங்கள்தான் போட்டியிட வேண்டும் என்று ஒவ்வொருகட்சியுமே விரும்புகின்றன. இதனால் ஆர்.கே.நகர், திருவாரூர் தொகுதிகளை யார் எடுத்துக் கொள்வது என்பதில் தேமுதிக- மநகூ. கூட்டணியில் பெரும் குழப்பம் நீடித்து வருவதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதை ஒப்புக்கொள்ளும் வகையில் ம.ந.கூ. தொகுதிகளின் விவரங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், ஆர்.கே.நகர், திருவாரூர் தொகுதிகளுக்காக தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே போராடினோம்...விருப்பம் தெரிவித்தோம் என்பது உண்மை.
இறுதியில் ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகளும், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications