வைகோவின் பேச்சு விரக்தியின் வெளிப்பாடா? திருமாவளவன் விளக்கம்
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் யாரும் விரக்தியில் இல்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப்படுவது அக்கட்சியின் உள்விவகாரம் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்
திருச்சி: மக்கள் நலக் கூட்டணி உடைய நான் காரணமாக இருக்கமாட்டே என மதிமுக பொதுச்செயலர் வைகோ விரக்தியில் பேசவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவையடுத்து அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பது விவாதமாகியிருக்கிறது. இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதில் நாங்கள் கருத்து சொல்ல எதுவுமே இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு தொடர வேண்டும். 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். மத்திய அரசு மறைமுகமாகவோ நேர்முகமாகவோ நெருக்கடி கொடுக்க கூடாது. ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.'
அப்போது, மக்கள் நல கூட்டணி உடைவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்ற வைகோவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த திருமாவளவன், அது விரக்தியின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தல்ல. திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டம், பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு, இவற்றில் திமுக காங்கிரஸ் பங்கேற்றது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் சொன்ன வார்த்தைகள். மக்கள் நல கூட்டணி தலைவர்களிடம் எந்த விரக்தியும் இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications