கள்ளக்குறிச்சி எம்எல்எ புகார் தொடர்பான கேள்வி.. பதிலளிக்க மறுத்த அமைச்சர் பர்வேஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனை வளாகத்தில், தமிழகம் முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர், திடீரென மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவுக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.

Kallakurichi MLA

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தினசரி வழங்கப்படும் மருத்துவச் சேவைகள், மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நலன் துறைச் செயலாளர் வீரராகவர், இஎஸ்ஐ மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பிரகலாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முகமது பர்வேஸ், தமிழகத்தில் சுமார் 47 லட்சம் தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் ஒரு கோடியே 90 லட்சம் பேர் இத்திட்டத்தின் மூலம் மருத்துவச் சேவைகளைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இஎஸ்ஐ மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குப் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அவற்றைத் தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து படிப்படியாகச் செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான புகார் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர், "கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய இடம் இது இல்லை. இஎஸ்ஐ மருத்துவமனை தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங்கள்; அதற்குப் பதிலளிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, செங்கல் சூளைகளில் சிறுவர்கள் கொத்தடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும், தவெக அரசு அமைந்த பிறகு பொதுமக்கள் நேரடியாக அமைச்சர்களிடம் தங்களது புகார்களைத் தெரிவித்து வருவதாகவும், அந்தப் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+